சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்..!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான சுகாதார அதிகாரிகள் குழு நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளதுடன், வைத்தியசாலையின் நிலைமைகளை பார்வையிட்டுள்ளது.
வைத்தியசாலையின் பகுதிகளை பார்வையிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடினார். இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள் வைத்தியர்கள்
என பலரும் கலந்துகொண்டனர்.