யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம்! பொலிஸாரும் உடந்தை, பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு...

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம்! பொலிஸாரும் உடந்தை, பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு...

யாழ்.வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்த அனுமதிப் பத்திரம் இல்லாத மர பலகைகள் மற்றும் தீராந்திகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டதாக விபத்தில் காயமடைந்த இளைஞனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளையும் வெளியிட்டிருக்கின்றனர். 

பொலிஸாருக்கு தொிந்தே வாகனத்திலிருந்த மரங்கள் மாற்றப்பட்டதாகவும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியை காப்பாற்றுவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் காயமடைந்த இளைஞனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்திலிருந்த மரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்படுவதை தாம் ஏதேச்சையாக பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த சமயம் கண்டதாக கூறியுள்ள உறவினர்கள், இது தொடர்பாக பொறுப்பவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியுள்ளனர். 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு