யாழ்.சித்தங்கேணியில் விபத்து! வீட்டு வாசலில் நின்ற இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சித்தங்கேணியில் விபத்து! வீட்டு வாசலில் நின்ற இளைஞன் படுகாயம்..

யாழ்.சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று காலை சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை நோக்கி சென்ற வாகனம் வீதியை விட்டு விலகியதுடன்,

தனது வீட்டின் படலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டு படலையினை திறந்துகொண்டு இருக்கும்போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் இளைஞரின் ஒரு கால் முற்றாக முறிந்துள்ளதுடன் மற்றைய காலும் சேதமடைந்துள்ளது. 

அத்துடன் இளைஞரின் மோட்டார் சைக்கிள் முற்றாகவே சேதமடைந்துள்ளது.1990 என்னும் அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் 

இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வாகனத்தின் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்ட நிலையில் 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு