காசாவில் யுத்த நிறுத்தம்!! -3 நாட்கள் தொடர்ந்த தாக்குதல்கள் முடிவு-
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (Pஐது) இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
எகிப்தின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 3 நாட்களாகத் தொடர்ந்த கொடிய இஸ்ரேலிய வான் வழித் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல் பகுதிகள் மீதான பாலஸ்தீன போராளிகளில் சரமாரி ரொக்கெட் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
இதேவேளை, யுத்த நிறுத்தம் மீறப்பட்டால் பதிலடி கொடுக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இஸ்ரேலின் தேசிய பொது இராஜதந்திர பணியகத்தின் தலைவர் லியோர் ஹயாத் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த எகிப்துக்கும் இஸ்ரேல் நன்றி தெரிவித்தது.