தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் தனக்கு வாக்களித்தனர் என ரணில் விக்கிரமசிங்க கூறினால் இரகசிய வாக்கெடுப்பும், ஜனாதிபதி தொிவும் முறைகேடானது..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிலர் தனக்கு வாக்களித்தனர் என ரணில் விக்கிரமசிங்க கூறினால் இரகசிய வாக்கெடுப்பும், ஜனாதிபதி தொிவும் முறைகேடானது..!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆவதற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியுமானால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானது சட்டவிரோதமானது. 

மேற்கண்டவாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

நேற்று சனிக்கிழமை இணுவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற புளெட் அமைப்பின் பத்தாவது பொதுச் சபை கூட்டம் முடிவுற்ற பின் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமையானது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மறைமுக வாக்களிப்பின் மூலமேயாகும். அவ்வாறான மறைமுக வாக்களிப்பின்போது தமிழ்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் கூறுவது வாக்களிப்பையே முறைகேடானதாக மாற்றிவிடும்.

பாராளுமன்றத்தில் வாக்களிக்கும்போது தனது வாக்குச் சீட்டை கையடக்க தொலைபேசியில் படம் எடுத்தால் அல்லது பாகிரப்பட்டால் ஏழு வருடத்திற்கு குறையாத தண்டனை கிடைக்கும் என சபாநாயகரே கூறியிருக்கிறார்.

மேலும் நேற்று இடம்பெற்ற கட்சியின் பத்தாவது பொதுச் சபை கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன் எமது பொதுச்சபை கூட்டத்தில் என்னை தலைவராக மீண்டும் தெரிவு செய்துள்ளனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பங்காளி கட்சியாக நாம் செயற்படும் நிலையில் பங்காளி கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழமை. தமிழ் மக்களின் உரிமைக்கான ஒரே ஒரு அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்பட நிலையில் ஒன்றிணைந்து பயணிப்பதே தமிழ் மக்களுக்கு பலத்தைச் சேர்க்கும்.

ஆகவே எமது கட்சி சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே தமிழ் மக்களின் தீர்வாக என்றும் வலியுறுத்துவதோடு தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக தொடர்ந்தும் பயணிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு