SuperTopAds

மகனைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை!! -கனடாவில் இலங்கையர் பலியான பரிதாபம்-

ஆசிரியர் - Editor II
மகனைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை!! -கனடாவில் இலங்கையர் பலியான பரிதாபம்-

கனடா நாட்டில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்ந்து வந்த பகீர் ஜினைதின் (வயது 57) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். 

இலங்கையிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் கனடா சென்ற பகீர் ஜினைதின் சொந்தமாக கணினி தொடர்பிலான தொழில் ஒன்றை செய்துவந்தார். கடந்த வார இறுதியில் அவரின் குடும்பத்தினர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பொழுபோக்குப் பூங்கா ஒன்றிற்குச் சென்றிருக்கிறார்கள்.

இதன் போது பகீர் ஜினைதினும், அவரது இளைய மகனான ஜைத்தும் (வயது 9)  தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்திருக்கிறார்கள். அப்போது திடீரென படகு கவிழ்ந்து, அதில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.

உடனே மகனைக் காப்பாற்ற பகீர் ஜினைதின் தண்ணீருக்குள் குறித்துள்ளார். அங்கே நடந்த குழப்பதைக் கண்ட சிலர் உடனடியாக தண்ணீருக்குள் குதித்து ஜைத்தை காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் பகீர் ஜினைதின் என்ன ஆனார் என ஒருவரும் கவனிக்கவில்லை.

பின் பகீர் ஜினைதின் இன் மனைவியான பர்சானா தன் கணவரைக் காணவில்லை என்று பதறியுள்ளார். உடனே சிலர் தண்ணீருக்குள் குதித்து அவரைத் தேடத் ஆரம்பித்தனர். 

அங்கு பணியில் இல்லாத தீயணைப்புத் துறையினர் இருவர் இருக்க, அவர்கள் தண்ணீரில் குதித்து பகீர் ஜினைதினை தண்ணீரிலிருந்து மீட்டு அவருக்கு முதலுதவி அளித்த பின் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். 

அங்கு சுயநினைவில்லாமல் இருந்த அவருக்கு செயற்கை சுவாசமளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.