மகளை கண்டித்ததற்காக கணவனின் மண்டையை உடைத்த மனைவி..! யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மகளை கண்டித்ததற்காக கணவனின் மண்டையை உடைத்த மனைவி..! யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

யாழ்.உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், 

மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார். 

இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார். 

இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு