வடமாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பாடசாலைகள் வாரத்தில் 5 நாட்களும் நடைபெறும்! பிரதம செயலாளர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பாடசாலைகள் வாரத்தில் 5 நாட்களும் நடைபெறும்! பிரதம செயலாளர்..

வடமாகாண  கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் வாரத்தில் 5 நாட்களும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளில் வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலை இயங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. 

போக்குவரத்துப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற பாடசாலைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை நடத்துதல் தொடர்பில் குறித்த வலயங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். 

என வடமாகாண பிரதம செயலாளரால் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு