மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை சில தனிநபர்கள் பலவீனப்படுத்த முயற்சி! ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை சில தனிநபர்கள் பலவீனப்படுத்த முயற்சி! ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார்..

13ம் திருத்த சட்டத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்த சில தனிநபர்கள் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியிருக்கின்றார். 

ஆளுநர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, மாகாணசபை முறைமையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

அதற்காக பல மாகாணங்கள் போராடும் நிலையில் உரத்த குரலில் பேசும் சிலரின் செயற்பாடுகள் மாகாண அதிகாரங்களை தவறான பாதையில் கொண்டு செல்வதாகவே  அமைந்து விடுகின்றது. 

வடமாகாண அபிவிருத்திக்காக பெருநகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து 25க்கு மேற்பட்ட நிறுவனங்கள் மாகாணத்தில் பணியாற்றியுள்ளன. மேலும் மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவிடம் 

தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வே நாட்டின் மாகாண ஓய்வூதிய திட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பில் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு