வாயில்லா ஜீவனை கொன்று, கோடரியால் கொத்தி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளிட்ட இருவர் கைது! யாழ்.புங்குடுதீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாயில்லா ஜீவனை கொன்று, கோடரியால் கொத்தி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளிட்ட இருவர் கைது! யாழ்.புங்குடுதீவில் சம்பவம்..

யாழ்.தீவகம் - புங்குடுதீவு 9ம் வட்டாரத்தில் நாயை கொலை செய்து அதனை கை கோடரியால் வெட்டி அதனை வீடியோ பதிவ செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர். 

அதனோடு தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு