SuperTopAds

யாழ்.நெடுந்தீவு - நயினாதீவு - அனலைதீவு பகுதிகளில் மீள் புதுப்பிக்கதக்க சக்தி வள திட்டம்! 10 மாதங்களில் பணிகளை முடிக்க மும்முரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு - நயினாதீவு - அனலைதீவு பகுதிகளில் மீள் புதுப்பிக்கதக்க சக்தி வள திட்டம்! 10 மாதங்களில் பணிகளை முடிக்க மும்முரம்..

யாழ்ப்பாணத்திலுள்ள 3 தீவுகளில் இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்துடன் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டத்தை 10 மாதங்களில் நிறைவுறுத்தும் வகையில் பணிகள் இடம்பெற்றுவருகின்றது. 

நயினாதீவில் 1.34 ஹெக்டர், அனைலைதீவில் 2.8 ஹெக்டர், நெடுந்தீவில் 4.86 ஹெக்டயர் நிலம் குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

நெடுந்தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சுமார் முப்பது கடல் மையில் தூரமே உள்ள நிலையில் இந்திய தரப்பால் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மேற்படி திட்டத்தை இந்தியாவிடமே கையளித்ததாக செய்திகள் வெளிவந்தன.ஏற்கனவே மூன்று தீவுகளிலும் சீன அரசாங்கத்தினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் குறித்த திட்டத்தினால் இந்தியா - இலங்கை நட்புறவில் பாதிப்புகள் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த திட்டத்தை இந்திய அரசாங்கம் தனது நன்கொடை நிதி பங்களிப்புடன் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் அதற்கான ஒப்பந்த நிறுவனம் கேள்வி மனுக் கோரலின் பிரகாரம் இந்தியா நிறுவனம் ஒன்றிற்கே வழங்கப்பட்டவுள்ளது. 

இந்தியா அரசினால் மூன்று தீவுப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்ற மீள் புதுப்பிக்க சக்தி வளத் திட்டத்தின் பிரதான திட்டங்களாக சோலர், காற்றாலை, மின் பிறப்பாக்கிகள் மற்றும் மின் சேமிப்பான் போன்றவை பிரதான இடத்தை வகிக்கின்றது.

ஆகவே குறித்த திட்டத்துக்கான மாதிரி படங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்ட நிலையில் குறித்த தீவுகளுக்கு இலங்கை - இந்தியா அதிகாரிகள் இரு தடவைகள் விஜயம் மேற்கொண்ட நிலையில் திட்டத்தை பத்து மாதங்களில் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.