யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முகப்பில் பனை மரங்களை நடுகை செய்யவும், அழகுபடுத்தவும் வடமாகாண ஆளுநர் திட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முகப்பில் பனை மரங்களை நடுகை செய்யவும், அழகுபடுத்தவும் வடமாகாண ஆளுநர் திட்டம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்புறத்தை  அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை வடமாகாணசபையின் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

கடந்த வாரம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் தேவைப்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு அங்கு உள்ள அதிகாரிகளை சந்தித்தபோதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

விமான நிலையத்தின் வாகன தரிப்பிடம் மற்றும் பிரதான வாயிலை சூழ உள்ள பகுதிகளில் பூ மரங்கள் மற்றும் நிழல் மரங்களை நாட்டுதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் முகமாக விமான நிலையத்தின் வளாகத்தில் பனை மரங்கள் நாட்டப்படுவதுடன் சோளார் தொழில்நுட்பத்துடன் கூடிய மின்விளக்குகள் 

விமான நிலையத்தை சூழ உள்ள பகுதிகளில் பொருத்தப்படவுள்ளது. அதேபோல் விமான நிலையத்தில் பயணிகளின் சுகாதார மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச தரத்திலாளான மருத்துவமனை செயற்படுகள் முன்னெடுக்கப்படும் 

எனவும் விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு