SuperTopAds

கடற்றொழிலாளர்கள், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! 10 ஆயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் வழங்கும் இந்தியா, அமைச்சர் டக்ளஸின் முயற்சி வெற்றி..

ஆசிரியர் - Editor I
கடற்றொழிலாளர்கள், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! 10 ஆயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் வழங்கும் இந்தியா, அமைச்சர் டக்ளஸின் முயற்சி வெற்றி..

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக சுமார் 10 ஆயிரம் மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் ஏற்றுமதி செய்யுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைக்கு இந்திய அரசு இணக்கம் தொிவித்துள்ளது. 

இந்தியாவில் மண்ணெண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் கடற்றொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய விசேட நடைமுறைகளின் கீழ் இந்திய அரசு இந்த இணக்கத்தை தொிவித்திருப்பதாக கூறப்படுகின்றது. 

நாட்டில் தீவிரமான எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் பாரிய தாக்கத்தை எதிர்கொண்டிருப்பதுடன், பாரிய வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சின் ஊடாக தொடர்ச்சியாக எரிபொருளை பெறுவதற்கு பல கட்டங்களாக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் ஓரு கட்டமாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.