வடமாகாணத்தின் புதிய ஆளுநர் டீ.எம்.சுவாமிநாதனா?

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் புதிய ஆளுநர் டீ.எம்.சுவாமிநாதனா?

வடமாகாண புதிய ஆளுநராக டீ.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக உள்ளக தகவல்கள் தொிவிக்கின்றன. 

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க பதவியேற்றதன் பின்னர் 9 மாகாணங்களினதும் ஆளுநர்களை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை இவ்வாறு ஆளுநர் பதவிகளுக்கு நியமிப்பதற்கும் அது தமது கட்சியின் எதிர்கால நலன்களுக்கு உதவும் என ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பக்களின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், 

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்னாள் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் உள்ளடங்களாக ஐவருடைய பெயர்கள் பருந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

எனினும் தற்போதைய சூழ்நிலையில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்ற நிலையில் சிலவேளை ஆளுநர் மாற்றம் பிற்போடப்படலாம் எனவும் நம்பந்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு