SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோக மோசடிகளை மாவட்டச் செயலர் ஒரு வாரத்திற்குள் முடித்துவைக்கவேண்டும்! அல்லது விலகவேண்டும்! -தொழிலதிபர் துவாரகேஸ்வரன்-

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோக மோசடிகளை மாவட்டச் செயலர் ஒரு வாரத்திற்குள் முடித்துவைக்கவேண்டும்! அல்லது விலகவேண்டும்! -தொழிலதிபர் துவாரகேஸ்வரன்-

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பொறுப்பில் அனைத்தையும் விடவேண்டும். 

மேற்கண்டவாறு தொழிலதிபர் தி.துவாரகேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

யாழ்.மாவட்டத்தின் தேவையை விட அதிகளவான எரிபொருள் வருகிறது. அவ்வாறு அதிகமாக வருகிற படியால் தான் கறுப்புச்சந்தையில் 1500 ரூபாவிற்கும் அதிகமாக எரிபொருள் விற்கப்படுகிறது. 

இதற்கு யாழ்.மாவட்ட செயலர் ஒரு காத்திரமான நடைமுறைகளை வழிப்படுத்துவதற்கு முன் வர வேண்டும். அத்துடன் மேலதிக அரசாங்க அதிபர் முறைகேடான வேலைகளை செய்து வருவதுடன் முறைகேடான சட்டதிட்டங்களை உருவாக்கி வருகின்றார். 

இதிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும். மேலும் அடுத்த ஒரு வாரகாலத்திற்குள் ஆட்டோ, பஸ், லொறி, மோட்டார் சைக்கிள், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்கவேண்டும். 

குடாநாட்டு மக்கள் கண்ணியமானவர்கள், ஒரு போராட்டத்தில் இறங்கவில்லை நேர்மையாக நடக்கின்றார்கள் என சொல்லிய நாளில் இருந்து திட்டமிட்டு இந்த அரசாங்கத்தை பிழையான வழியில் சித்திரிப்பதற்காக மக்களை தூண்டுகிற செயற்பாட்டில் உதவி அரசாங்க அதிபர், நல்லூர் பிரதேச செயலர் மற்றும் காரைநகர் பிரதேச செயலரும் ஈடுபடுகின்றனர் என்பதனை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.

இதன் பின்புலம் என்ன? என்பதனை ஆராய வேண்டியுள்ளது. இவர்களால் யாழ்.மக்கள் நிந்திக்கப்படுகிறார்கள். இவற்றினை யாழ்.அரசாங்க அதிபர் சீர் செய்ய வேண்டும்.இ ல்லையேல் இதிலிருந்து விலகி எரிபொருள் உரிமையாளர்கள் முடிவெடுப்பதற்கு விட வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவோம் என்றார்.