SuperTopAds

1983ல் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி - தங்கத்துரை உள்ளிட்ட போராளிகளினதும், பொதுமக்களினதும் 39ம் ஆண்டு நினைவேந்தல் யாழில்..

ஆசிரியர் - Editor I
1983ல் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி - தங்கத்துரை உள்ளிட்ட போராளிகளினதும், பொதுமக்களினதும் 39ம் ஆண்டு நினைவேந்தல் யாழில்..

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட போராளிகள் அடங்கிய 53 பேர் மற்றும் 1983ம் ஆண்டு ஆடி மாதம் 25ம், 27ம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொதுமக்களுக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈகை சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும், அரசியல் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைக்க, 

ரெலோவின் யாழ்.மாவட்ட துணை அமைப்பாளரும் யாழ்.மாநகர துணை மேயருமான து.ஈசன், ரெலோவின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன், ரெலோவின் நல்லூர் தொகுதி அமைப்பாளரும் நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,

ரெலோவின் யாழ்.பணிமணை பொறுப்பாளர் மு.உதயசிறி, ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் சடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.