வெளிநாட்டு பயணிகளை அழைத்துவரவும் - அழைத்துச் செல்லவும் ஹயஸ் வாகனங்களுக்கு விசேடமாக டீசல் வழங்கும் நடைமுறை நிறுத்தப்படுகிறது...!

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டு பயணிகளை அழைத்துவரவும் - அழைத்துச் செல்லவும் ஹயஸ் வாகனங்களுக்கு விசேடமாக டீசல் வழங்கும் நடைமுறை நிறுத்தப்படுகிறது...!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளை ஏற்றுவதற்காகவும், மீண்டும் விமான நிலையம் செல்வதற்காகவும் வாடகை வாகனங்களுக்கு டீசல் வழங்கும் நடைமுறை முடிவுறுத்தப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவிக்கின்றன. 

நாட்டில் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கை ஓரளவுக்கு சீரானாலும் நெருக்கடி நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். 

அதேபோல் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு விமான நிலையம்வரை தனிப்பட்ட வாடகை வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். அவ்வாறானவர்களுக்கு எரிபொருள் வழங்கும் விசேட ஒழுங்கை முடிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் தனிப்பட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்துவோர் பொதுப் போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. 

இதேபோல் மேற்படி வெளிநாட்டு பயணிகளின் தனிப்பட்ட உபயோகத்திற்கான வாடகை வாகனங்களுக்கு இதுவரை தலா 60 லீற்றர் டீசல் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் எரிபொருள் கோரும் இவ்வாறான வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் 

மாற்று நடவடிக்கையினை பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலறிந்த வட்டாரங்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு