இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் விடுத்துள்ள பணிப்பு! வாகன இலக்கம் மற்றும் QR நடைமுறைக்கு மட்டுமே இன்று எரிபொருள் விநியோகம்...

ஆசிரியர் - Editor I
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் விடுத்துள்ள பணிப்பு! வாகன இலக்கம் மற்றும் QR நடைமுறைக்கு மட்டுமே இன்று எரிபொருள் விநியோகம்...

வடமாகாணத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் தேசிய எரிபொருள் அட்டை QR முறைமை மூலமாக எரிபொருள் விநியோகிக்கும்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் QR முறைமை மூலம் விநியோகிக்கும் எரிபொருளின் அளவு, கணனி ஒன்லைன் வலையமைப்பு மூலம் கண்காணிக்கப்படும் எனவும் அலுவலகம் அறிவித்திருக்கின்றது. அதேபோல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவு செய்யும் எரிபொருள் அளவும் QR முறைமை ஊடாக விநியோகம் செய்யப்படும் எரிபொருள் அளவும், 

ஒப்பீடு செய்யப்பட்டு, அதில் குறைபாடுகள் இருப்பின் அடுத்த எரிபொருள் கொள்வனவு கட்டளை சமர்ப்பிப்பது பரிசீலிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வடபிராந்திய அலுவலகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு