SuperTopAds

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் 6 பேர் கைது! இ.போ.ச சேவைகள் இன்று வழமைபோல்...

ஆசிரியர் - Editor I
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் 6 பேர் கைது! இ.போ.ச சேவைகள் இன்று வழமைபோல்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் இ.போ.ச யாழ்.சாலை ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் நேற்று மாலை 4 மணியுடன் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் வழமைபோன்று ஆரம்பித்தது.

கடந்த 22ம் திகதி இரவு 9 மணியளவில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் இ.போ.ச கல்கமுவ சாலை ஊழியர்களினால் 

தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்ட நிலையில் தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையினரால் சேவைகள் மேற்கொள்ளப்படவில்லை.

தொழிற்சங்கங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் கல்கமுவ சாலையை சேர்ந்த ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பகிஷ்கரிப்பை கைவிட இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன.