நாட்டு மக்களுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பு..!
நாட்டுக்கு எரிபொருள் எடுத்துவரப்பட்டுள்ளபோதும் நாடு முழுவதும் அமுலப்படுத்தப்படவுள்ள எரிபொருள் அனுமதி பத்திர நடைமுறை அமுலுக்கு வந்ததன் பின்பே விநியோகம் இடம்பெறும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.