SuperTopAds

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் மீண்டும் விளக்கம்!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் மீண்டும் விளக்கம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இராஜினாமா கடிதத்தை இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை. என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கூறியிருக்கின்றார். 

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது பதவி விலகலை கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் தனது இராஜினாமாவை கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக் காரணங்களால் ஜனாதிபதியால் விமானத்தில் ஏற முடியாமல் போனதாகவும், சிங்கப்பூருக்குச் செல்வதற்காக தனியார் விமானத்திற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.