SuperTopAds

எரிபொருளுக்கான டோக்கன் நடைமுறையில் திருப்தியில்லை..! பல்வேறு முறைகேடுகள்...

ஆசிரியர் - Editor I
எரிபொருளுக்கான டோக்கன் நடைமுறையில் திருப்தியில்லை..! பல்வேறு முறைகேடுகள்...

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் வழங்குவதற்கு எரிபொருள் அட்டை நடைமுறையை பின்பற்றும்படி தாம் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், 

டோக்கன் நடைமுறையில் தமக்கு திருப்தி இல்லை எனவும், டோக்கன் நடைமுறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக தமக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் எரிபொருள் அட்டை பொறிமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் இப்போது எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எரிபொருள் பற்றாக்குறை பற்றி அனைவரும் அறிவீர்கள். 

இருப்பினும் தேவையானதை சரியாக வழங்குவதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம். தற்போதுள்ள நெருக்கடிக்குள் நெருக்கடியாக இடர்முகாமைத்துவம் மாறியுள்ளது. 

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கடுமையாக வெளிநாட்டுப் பயணங்களுடன், கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் குறைந்தபட்சம் இவ்வாறான பணிகளையாவது செய்வோம்.