யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு இரண்டாம் மொழி கற்பித்தல் வகுப்புக்களை தொடக்கிவைத்த நீதி அமைச்சர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு இரண்டாம் மொழி கற்பித்தல் வகுப்புக்களை தொடக்கிவைத்த நீதி அமைச்சர்..!

யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு சிங்கள மொழி கற்பித்தலும், சிங்கள பொலிஸாருக்கு தமிழ் மொழி கற்பித்தலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீதி அமைச்சரினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து பெளத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம்டிஎஸ் இராமச்சந்திரனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரின் அனுமதியுடன் குறித்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிசாருக்கு முதற்கட்டமாக சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து சிங்கள பொலிசாருக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கையை இந்து பௌத்த கலாசார பேரவை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு