இ.போ.ச ஊழியர்களுக்கு 3 நாட்களுக்குள் எரிபொருள் வழங்க ஆளுநர், மாவட்டச் செயலர் இணக்கம்! கடமைக்கு வருமாறு பிராந்திய முகாமையாளர் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச ஊழியர்களுக்கு 3 நாட்களுக்குள் எரிபொருள் வழங்க ஆளுநர், மாவட்டச் செயலர் இணக்கம்! கடமைக்கு வருமாறு பிராந்திய முகாமையாளர் அறிவிப்பு...

இ.போ.ச வடபிராந்திய சேவை உத்தியோகஸ்த்தர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிட்டு கடமைக்கு வருமாறும், ஊழியர்களுக்கு பெற்றோல் பெற்றுக் கொடுப்பதற்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, மாவட்டச் செயலர் க.மகேஸன் ஆகியோர் உத்தவாதம் வழங்கியுள்ளதாகவும் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் கூறியுள்ளார்.

விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இ.போ.ச சாரதிகள், காப்பாளர்கள் தாம் கடமைக்கு வருவதற்கான எரிபொருள் இன்மையால் கடமைக்கு வரமாட்டோம் என கூறியதாக செய்திகள் பரவியிருந்தன.

இந்த விடயத்தில் தலையிட்டுள்ள ஆளுநர் மற்றும் மாவட்டச் செயலர் ஆகியோர் 3 நாட்களுக்குள் எரிபொருள் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

மேலும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்டத்திலுள்ள உள்ள 3 பிரதான சாலைகளில் ஊழியர்களுக்கும்  தேவையான எரிபொருளை வழங்குவதற்கு  பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இன்மையால் கடமைக்கு வர முடியாத உத்தியோகத்தர்களை இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மூலம் ஏற்றி வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில் கடமைக்கு வருமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு