அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த யாழ்ப்பாண வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

ஆசிரியர் - Editor I
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த யாழ்ப்பாண வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

பாவனையாளர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த வர்த்தகர் மீது பாவனையாளர் அதிகாரசபை வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 1 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலர் மேலும் கூறியுள்ளார். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு