SuperTopAds

யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான கப்பல் சேவை, இப்போதைக்கு முடியாது..! கைவிரித்த அமைச்சர், காரணம் இதுதானாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான கப்பல் சேவை, இப்போதைக்கு முடியாது..! கைவிரித்த அமைச்சர், காரணம் இதுதானாம்..

யாழ்.பலாலி விமான நிலையத்தின் பணிகளை உடன் தொடங்க முடியும் ஆனாலும் காங்கேசன்துறை துறைமுகத்தின் பணிகள் உடனடியாக சாத்தியமற்றது. என அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா கூறியுள்ளார். 

காங்கேசன்துறை துறைமுகம் ஊடான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வுக் கலந்துரையாடல் நேற்று மாலை பலாலி விமான நிலையத்தில் இடம்பெற்றது.

விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தினபோதே.அ மைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். துறைமுகம் அருகே அதற்கான வசதிகள் மேம்படுத்த வேண்டும். 

சில கட்டிடங்கள் அமைக்க வேண்டும். அவை ஒப்பந்தங்கள் ஊடாகவே வழங்க முடியும் அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவற்றினை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகசம் தேவை.

இதனால் உடனடியாக கப்பல் பணி ஆரம்பிக்கும் சாத்தியம் இல்லை. விரைவில் அதற்கான பணிகளை முன்னெடுக்கப்படும். 

இதேநேரம் பலாலி விமான நிலையத்தில் இருந்து அதன் பணிகளை 1ஆம் திகதி முதல் மேறகொள்ள ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.