யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்..! பொய்யை கூறி நடுவில் நுழைந்த வாகனத்தால்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்..! பொய்யை கூறி நடுவில் நுழைந்த வாகனத்தால்...

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை 5 மணியிலிருந்து காத்திருந்த நிலையில் நபர் ஒருவர் தனது வாகனத்தை நடுவில் நுழைத்து டீசல் கொள்வனவு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அதிகாலை 5 மணியிலிருந்து பொதுமக்கள் டீசலுக்காக காத்திருந்த நிலையில் சடுதியாக வாகனம் ஒன்று வரிசையை மீறி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்து டீசல் கொள்வனவு செய்துள்ளது. 

இதனையடுத்து வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் குழப்பமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணியாளர்களுடன் முரண்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வாகனத்தில் வந்தவர்கள் தாம் அமைச்சில் இருந்து வருவதாக கூறினார்கள் அதனாலேயே நிரப்பினோம் என கூறியுள்ளனர். 

குறித்த சம்பவத்தினால் மக்கள் குழப்பமடைந்து முரண்பட்ட நிலையில் வரிசையில் நின்ற மக்கள் எதிர்ப்பு தொிவித்த நிலையில் அந்த வாகனம் அங்கிருந்து சென்றுள்ளது. இந்நிலையில் அந்த வாகனத்தில் வந்தது சட்டத்தரணி ஒருவர் எனவும், 

அவர் அமைச்சில் இருந்து வந்தவர் அல்ல. அவர் வடமாகாணத்தை சேர்ந்த ஒரு சட்டத்தரணி எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு