யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள பணிப்புரை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள பணிப்புரை..!

யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டத்தைத் தயாரிக்குமாறும், 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், 

இதன் மூலம் மதிப்பிடப்பட்டுள்ள வருமானம் 800 மில்லியன் டொலர்கள் எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் வகையில் 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு 

எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு