யாழ்.கொடிகாமத்தில் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய கார்..! முதியவர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய கார்..! முதியவர் பலி..

யாழ்.கொடிகாமம் - கொயிலாமனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் மீது கார் மோதியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் தெரிந்தவர்கள் 0262050222 இந்த இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். 

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு