யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல்..! மோட்டார் சைக்கிளில் வந்த காடையர்கள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்தை வழிமறித்து தாக்குதல்..! மோட்டார் சைக்கிளில் வந்த காடையர்கள் அட்டகாசம்..

யாழ்.சாவகச்சோியில் வீதியால் பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்றை வழிமறித்த கும்பல் வாகனம் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த குறித்த வாகனம் சாவகச்சோியை அண்மித்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த காடையர்கள் வாகனத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதனால் வாகனத்தின் கண்ணாடிகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு