யாழ்ப்பாணத்தை பிரிய மனமில்லாமல் இடமாற்றம் வழங்கப்பட்டும் யாழ்ப்பாணத்திலேயே குந்தியிருக்கும் 27 பாடசாலை அதிபர்கள்..! காப்பாற்றுவது யார்?
யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்ட 27அதிபர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்காது தொடர்ந்தும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, மாவட்டத்தில் தீவகம் தவிர்ந்த யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களில் இருந்து ஆசிரியர் நியமனத்திலும்
அதிபர் நியமனத்திலும் இதுவரை வெளிமாவட்டம் செல்லாத சுமார் 47 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் முதற்கட்டமாக 27 பேர் வெளி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையினை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முன்னெத்திருந்தார். இந்நிலையில் பணி இடமாற்றம் வழங்கப்பட்ட அனைவரும் மேலமுறையீட்டை சமர்ப்பித்த நிலையிலும்
அவர்களினால் முறையான காரணங்கள் தெரிவிக்கப்பட காரணத்தினால் மேன் முறையீடும் மேன்முறையீட்டு சபையினால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஒரு அதிபர் மாத்திரம்
வெளிமாவட்டத்தில் தனது கடமையை பொறுபேற்றுள்ளார் என அறியக் கிடைக்கும் நிலையில் ஏனையவர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் உயர்நிலை அதிகாரி ஒருவரின் துணையுடன்,
தொடர்ந்தும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடையம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் உயர்நிலை அதிகாரியான,
வடகமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.