யாழ்.கோண்டாவிலில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து 11 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! ஒருவர் சிக்கினார், மற்றொருவர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து 11 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! ஒருவர் சிக்கினார், மற்றொருவர் தலைமறைவு..

யாழ்.கோண்டாவில் பகுதியில் தரித்துவிடப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சொந்தமான பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார். 

திருடிய இலத்திரனியல் பொருள்களை இன்றைய தினம் விற்பனை செய்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டார்.திருநெல்வேலியில் அமைந்துள்ள இலத்திரனில் பொருள்கள் விற்பனை நிலையத்தின் களஞ்சியம் கோண்டாவிலில் உள்ளது. 

கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக பாரவூர்தியில் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில் டீசல் இல்லாமை காரணமாக தரித்துவிடப்பட்டிருந்தது. 

அதன்போதே இரவு வேளை பாரவூர்தி உடைக்கப்பட்டு சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் வர்த்தகரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கோண்டாவிலைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 4 வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு