யாழ்.மாவட்ட மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிவிப்பு..! இன்றும் தேவையா அளவு பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது, வதந்திகளை நம்பவேண்டாம்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அமைச்சரவையில் விலை அதிகரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பபடும் வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலினால் யாழ்.மாவட்டத்தில் மக்கள் எரபொருள் நிரப்பு நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
அமைச்சரவையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஆனால் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றது.
அது தொடர்பில் எமக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. யாழ்.மாவட்டத்திலுள்ள 15க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பி செயற்கை தட்டுப்பாட்டினை உருவாக்ககூடாது. எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.