யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோரி ஆளுநருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோரி ஆளுநருக்கு கடிதம்..

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எழுத்துமூலம் கடிதம் அனுப்பபட்டுள்ளது. 

பிரதேசமட்ட அமைப்பு ஒன்றினால் குறித்த விடயம் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி மோசடி தொடர்பில் மாகாண உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டபோதும் வடமாகாண பிரதம கணக்காளர், 

வடமாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் உரிய வகையில் விசாரணை மேற்கொள்ளவில்லை. என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. 

மேலும் குறித்த கடிதத்தில் உள்ளக கணக்காளரினால் பருத்தித்துறை  வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் பின்வரும் விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டமை தொடர்பில் ஆளுநருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

24. 4. 2020 ஆம் திகதியிலிருந்து கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட திகதி வரையான காலப்பகுதியில் குறித்த வைத்தியசாலையில் 22 வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோதும் 10 வேலைத் திட்டங்களுக்கு மட்டுமே வடமாகாண பிரதம செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒப்பந்த கோவைகள் மற்றும் தொழில்நுட்பத்தினால் சான்றுபடுத்தப்பட்ட வேலை நிறைவேற்று அறிக்கை கணக்காய்வு குழுவினால் கோரப்பட்டபோதும் சமர்ப்பிக்கப்படாமையினால் குறித்த வேலை தொடர்பான கணக்காய்வினை மேற்கொள்ள முடியாது போனதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

09.12.2020 பிரதம செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட கருத்தின் பிரகாரம் குறித்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மூலம் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. 

எனினும் குறித்த வைத்தியசாலையில் நிர்மான வேலைகளுக்காக அரச சேவை சாராத உத்தியோகத்தர் ஒருவரை பணிக்கு அமர்த்தி மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் ஊதியம் வழங்கியமை அம்பலமாகியுள்ளது.

துரித அபிவிருத்தித் திட்டத்தின் கோவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 22 வேலைத்திட்டங்களில் இரண்டு வேலைத்திட்டங்கள் வைத்தியசாலை முகாமைத்துவ குழுவினரின் சகோதரனுக்கு பெறுகை ஒழுங்கு விதிக்கு முரணாக வழங்கியமை கண்டறியப்பட்டது.

2020 ஆம் ஆண்டு வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் கிடைக்கப்பெற்ற 210 மெத்தைகள் கணக்காய்வு தினமான 10. 02.2021 ஆண்டு வரை ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்த நிலையிலும் வைத்தியசாலை சொத்த பதிவேட்டில் உள்வாங்கப்படவில்லை.

மேலும் வைத்தியசாலையில் இடம்பெற்ற செலவினங்களுக்கு சிட்டை தயாரிக்கபடாமல் சில செலவினங்களுக்கு மட்டும் வழங்கிய பற்றுச்சீட்டு மட்டும் கணக்காய்வு சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் வைத்தியசாலையின் முகாமைத்துவக் குழுக்கென உருவாக்கப்பட்ட யாப்பு அதன் சட்டநீதியான வலுவை கணக்காய்வு செய்யப்பட்ட தினம் வரை உறுதி செய்யவில்லை போன்ற பல விடயங்களை மேற்கோள் காட்டி ஆளுநரை நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு