சிகிச்சை பெறவந்த இளம் பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட வைத்தியர் யாழ்.கோப்பாய் வைத்தியசாலைக்கு இடமாற்றம்..!
யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் கொடிகாமம் பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடும் குழப்பம் ஏற்பட்டிருந்ததுடன் வைத்தியசாலைக்குள் புகுந்த நபர்களினால் வைத்தியர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மருத்துவர் கோப்பாய் பகுதியில் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.