யாழ்.கச்சதீவை மீட்பதற்கு இதுதான் தருணமா? யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் பதில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவை மீட்பதற்கு இதுதான் தருணமா? யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் பதில்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பிவிட்டு கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே தருணம் என கூறிய கருத்தினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் சமூகம் மிகவும் மன வேதனை அடைவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா கூறியுள்ளார். 

நேற்று சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

எமது தொப்புள்கொடி உறவு என அடிக்கடி எமது தமிழ்நாடு மக்களையே கூறி வருகிறோம். இலங்கையில் பாரிய பொருளாதார பிரச்சினை காணப்படுமிடத்து தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலர் உணவு அனுப்பி வைக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. 

ஆனால் உதவிப் பொருட்கள் நமது கைகளுக்கு வந்து கிடைக்கும் முன்னரே கச்சதீவை பிடிப்பதற்கு இதுவே தருணம் என தமிழக முதலமச்சர் கூறியது வடமாகாண கடற்றொழிலாளர்களை மனவேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

நாம் 30 வருட கால யுத்தத்தில் சொல்லென்னாத் துயரங்களை சந்தித்து தற்போது பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். நாங்கள் வாழ்வாதாரத்திற்காக தினம் தினம் போராடிவரும் நிலையில் எமது கடல் வளத்தை இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் நாசம் செய்கின்றன.

இவ்வாறான நிலையில் நாம் நமது தொப்புள்கொடி உறவு எனக் கூறும் தமிழக முதலமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தமை எமக்கு மிகவும் கவலை அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு