யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் ஹயஸ் வாகனம் மோதி கோர விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் ஹயஸ் வாகனம் மோதி கோர விபத்து..!

கிளிநொச்சி - பளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, A9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் அதன் பின்னால் வந்த ஹயஸ் தனியார் பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹயஸ் சாரதி  படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு