அரிசி விலை தொடர்பில் அரசு அதிரடி நடவடிக்கை..! பதுக்கல் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து பொதுமக்களும் முறைப்பாடு வழங்கலாம்...

ஆசிரியர் - Editor I
அரிசி விலை தொடர்பில் அரசு அதிரடி நடவடிக்கை..! பதுக்கல் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து பொதுமக்களும் முறைப்பாடு வழங்கலாம்...

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது மிக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

அதனடிப்படையில் தனி உரிமையாளராக இருந்தால் 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 500,000 ரூபா முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு