நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸார் கொண்ட பாதுகாப்பு குழு..!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவை வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் (நடவடிக்கை பிரிவு) இதற்கான ஆலோசனைகளை,
அந்த பிரிவின் அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக ,
நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக்கு உத்தியோகத்தர்களைப் பெற்றுக்கொள்ளுமாறும்,
அது தொடர்பில் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி பட்டியல் ஒன்றினை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழ் இந்த 6 பேர் கொண்ட குழு அமைய வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில்,
எவரேனும் குறித்த பாதுகாப்பு தொடர்பில் விருப்பம் தெரிவிக்காவிட்டில் அது தொடர்பில் எழுத்து மூலம் அதனைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.