அண்ணாமலை - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
அண்ணாமலை - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு..!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமாலை - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் இன்று காலை 11.30 மணியளவில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

தனியார் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், 

தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீ.வீ.கே.சிவஞானம், த.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, இது சம்பிரதாயபூர்வமான சந்திப்பு என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு