யாழ்.மாவட்டம் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் - அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் இடையில் சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் - அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் இடையில் சந்திப்பு..!

யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் உடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர் ஜூலி சுங் 

முதலாவது சந்திப்பாக பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியை சந்தித்து சமகால நிலவரங்கள் குறித்து பேசியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு