SuperTopAds

பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்!! -தந்தை நண்பருடன் கைது-

ஆசிரியர் - Editor II
பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்!! -தந்தை நண்பருடன் கைது-

இந்தியாவின் விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அவரின் கொடூர தந்தை, அவரது நண்பருடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பதிவு: பிப்ரவரி 11,  2022 08:24 யுஆ

குறித்த சிறுமியின் தாய் இறந்துவிட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த சூழலில் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் விசாரித்ததில் சிறுமி கூறிய தகவலை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

அந்த சிறுமியை அவரது 44 வயதான தந்தை கோவிந்தன் மற்றும் அவரது நண்பரான 48 வயதான வி.சாத்தனூரை சேர்ந்த கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரும் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதன்படி குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.