உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை உள்ளது!

ஆசிரியர் - Admin
உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை உள்ளது!

"இலங்கையில் போரின் போதும் வன்முறைகளின் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை - அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது."  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

 "இலங்கையில் கடந்த காலங்களில் போரின்போதும் வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களை இன ரீதியில் அல்லது மத ரீதியில் பிரித்துப் பார்க்கக்கூடாது.

 அவர்களும் மனிதர்கள்.  உயிரிழந்தவர்களின் வலி அவர்களின் உறவுகளுக்குத்தான் தெரியும்.  அதில் எவரும் அரசியல் நடத்தக்கூடாது.  உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை, அவர்களின் உறவுகள் நினைவேந்துவதை எவரும் தடுக்கவே முடியாது" - என தெரிவித்துள்ளார்.

Radio