இன்றைய நாள் எப்படி 16/04/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 16/04/2018

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ரஜப் 28ம் தேதி,
16.4.18 திங்கட்கிழமை வளர்பிறை, அமாவாசை திதி காலை 7:57 வரை
அதன் பின் பிரதமை திதி, அசுவினி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:09 வரை
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சரஸ்வதி வழிபாடு.

மேஷம்: எதிர்மறை சூழ்நிலையும் அனுகூமாக மாறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் சீராகும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில நன்மை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமார். பெண்கள் குடும்பத்தில் வீண் செலவை தவிர்க்கவும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: உறவினரின் பேச்சால் சங்கடம் உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவைப்படும். சுமாரான லாபம் கிடைக்கும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும்.

சிம்மம்: நண்பரின் உதவியால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி்ப்பணியில் ஈடுபடுவீர்கள். ஆதாயம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்ப தேவை குறைவின்றி நிறைவேறும். சுபவிஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி: வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். அத்யாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பரால் உதவி உண்டு.

துலாம்: இலக்கை அடையும் வாய்ப்பு உருவாகும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் மட்டுமே லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.

தனுசு: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.

மகரம்: மனதில் நிம்மதி நிலைத்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க விடாமுயற்சியுடன் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்: நல்லவர் ஆலோசனையை ஏற்று முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரம் சீராக கூடுதல் உழைப்பு உதவும். லாபம் படிப்படியாக உயரும். போட்டி பந்தயத்தில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க திணறுவர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.