வடமாகாண முதலமைச்சரை சந்தித்தார் ஆறுமுகம் தொண்டமான்...
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று (8) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்தச் சந்திப்புக்கு இணங்கியதாக முதலமைச்சர் தரப்புத் தெரிவித்தது.
"நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் நிலவரங்கள், நாட்டின் அரசியல் நிலமைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் முன்னெடுப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது"