யாழ்.மாநகரசபை புதிய கட்டிடத்தை சிரித்த முகத்துடன் சிலர் பார்ப்பது வேடிக்கை..! அப்படி ஒன்று நடக்காது என்றவர்களும் அவர்களே..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை புதிய கட்டிடத்தை சிரித்த முகத்துடன் சிலர் பார்ப்பது வேடிக்கை..! அப்படி ஒன்று நடக்காது என்றவர்களும் அவர்களே..

யாழ்.மாநகரசபை புதிய கட்டிடத்திற்கான (யாழ்.மாநகர மண்டபம்) ஆரம்பக்கட்ட முயற்சிகளை விமர்சித்தவர்கள், புறக்கணித்தவர்கள் சிரித்த முகத்துடன் இன்று மாநகரசபை கட்டுமான பணிகளை பார்ப்பது வேடிக்கையான ஒன்று என மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயாளன் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுடன் இணைந்து சில மாநகரசபை உறுப்பினர்கள் புதிய மாநகரசபை கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டுள்ளனர். அவர்களே புதிய மாநகரசபை கட்டத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது

கடுமையாக விமர்சித்தவர்கள், புறக்கணித்தவர்கள். இன்று அதே மாநகரசபை உறுப்பினர்கள் முதல்வருடன் இணைந்து கட்டுமான பணிகளை பார்வையிடுவது வேடிக்கையான ஒன்றாகும். அழிக்கப்பட்ட யாழ்.மாநகரசபை கட்டத்தை மீள கட்டியெழுப்பவேண்டும். 

அது தேவையான ஒன்று என தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி காலத்தில் தீவிரமான முயற்சிகளை எடுத்திருந்தது. இதற்கமைய சுமார் 1000 மில்லியன் ரூபாய் நிதியை மட்டும் வழங்க மத்திய அரசு இணங்கியது. மிகுதி 500 மில்லியன் ரூபாய் நிதியை மாகாணசபையிடமிருந்தும், 300 மில்லியன் ரூபாய் பணத்தை

மாநகரசபையிடமிருந்தும் பெறுவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனாலும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ச்சியாக விடாப்பிடியாக நின்று மீள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபாய் நிதியையும் மத்திய அரசிடமிருந்து 

பெற்றுக் கொள்வதற்கு இணக்கத்தை பெற்றிருந்தார். இதற்கமைய பகிரங்க கேள்வி கோரல் விடுக்கப்பட்டு புதிய கட்டிடத்திற்கான நிர்மாண பணிகளின் ஆரம்ப நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டபோது வரவேற்பு, உபசரணை மற்றும் உணவு உள்ளிட்ட விடயங்களுக்கான செலவீனங்களை மாநகரசபை

பொறுப்பேற்கவேண்டும். என கேட்டுக் கொள்ளப்பட்டமைக்கு அமைவாக அப்போதைய முதல்வர் இமானுவேல் ஆனல்ட் இணங்கியதுடன், சபையின் அனுமதியை கோரியபோது இன்று மாநகர முதல்வர் கட்டிடத்தை பார்க்கபோகிறார் என்பதற்காக கூச்சமில்லாமல் தாங்களும் செல்லும் சில மாநகரசபை உறுப்பினர்கள், 

வெறும் விழா மட்டுமே நடக்கும் என்றும், புதிய கட்டிடம் ஒருபோதும் வராது எனவும் கூறியதுடன், ஆரம்ப நிகழ்வுக்கான செலவீனத்தை ஏற்கமாட்டோம். எனவும் கோஷமிட்டனர். மேலும் சிலர் ஆரம்ப நிகழ்வில் வழங்கப்படும் பயத்தம் பணியாரத்திற்கு கூறுவலை கோரப்பட்டதா? 

என கேள்விகளை எழுப்பியிருந்தனர். அவ்வாறான நிலையில் நிச்சயமாக கட்டிடம் கட்டப்படும் எனவும், அவ்வாறு கட்டப்படாவிட்டால் அதற்கான பணத்தை எனது சொந்த நிதியில் இருந்து தருகிறேன். என நான் பகிரங்கமாக கூறியிருந்தேன், என்னுடைய கருத்தை ஒத்த கருத்தினையே 

ஐ.தே.கட்சியின் மாநகரசபை உறுப்பினர் நிலாமும் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனடிப்படையிலேயே ஆரம்ப நிகழ்வுக்கான செலவுகளுக்கு சபை அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்னர் நடந்த ஆரம்ப நிகழ்வில் கூட இந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை. 

இந்த சம்பவங்கள் நடந்தபோது மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சபையில் இருந்திருக்கவில்லை. மேலும் அவர் முதல்வர் என்றவகையில் மாநகரசபை கட்டிட நிர்மாண பணிகளை பார்க்கும் உரித்து அவருக்குண்டு அதற்காக வராது, கூடாது, ஏற்கமாட்டோம், புறக்கணிப்போம்

என கூறியவர்கள் மாநகரசபை கட்டிட நிர்மாண பணிகளை சிரித்த முகத்துடன் பார்ப்பது வேடிக்கையான ஒன்றாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு