SuperTopAds

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இளைஞர்களின் கலந்துரையாடல் எதற்கு..? பல்வேறு கோணங்களில் எழும் கேள்விகள்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இளைஞர்களின் கலந்துரையாடல் எதற்கு..? பல்வேறு கோணங்களில் எழும் கேள்விகள்..

இளைஞர்களின் அரசியல் எதிர்காலம் என்னும் தலைப்பில் இலங்கை வேந்தன் கலை கல்லுாரி மண்டபத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இளைஞர்கள் கட்சியை வழிநடத்தவேண்டும். எனும் தொனிப்பொருளில் அமைந்திருந்த நிலையில், 

குறித்த கலந்துரையாடல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள மூத்தவர்களை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியா? என பல்வேறு சாராரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். குறித்த கலந்துரையாடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன்

கலந்து கொண்டிருந்ததுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களால் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பபட்டிருந்தது. சில விமர்சனங்களும் எழுப்பபட்டிருந்தது. மேலும் குறிப்பாக தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு தொடர்பாகவும் கருத்துக்கள் கூறப்பட்டன. 

எனினும் பெரும்பாலானவர்களின் கேள்விகள் இளைஞர்கள் கட்சியை வழிநடத்தவேண்டும். என்பதாக அமைந்திருந்த நிலையில் கட்சியில் உள்ள மூத்தவர்களை அகற்றுவதற்கான சமிக்ஞையா? என பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பபட்டிருப்பதுடன், 

கலந்துரையாடலில் கேட்கப்பட்ட பல கேள்விகள் தமிழரசு கட்சியின் தலைமை மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமைகளிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளாக அமைந்திருந்த நிலையில் அவை எதற்காக அங்கு கேட்கப்பட்டன? என்ற கேள்வியும் எழுப்பபட்டுள்ளது.