யாழ்.வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 1 மாணவர் அனுமதியில் மோசடி..! அதிபருக்கு அதிரடி இடமாற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 1 மாணவர் அனுமதியில் மோசடி..! அதிபருக்கு அதிரடி இடமாற்றம்..

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 1 மாணவர் அனுமதியின்போது மேலதிக மாணவர்களை இணைத்தமைக்காக குறித்த பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்யப்படவுள்ளார். 

யாழ்.வலயத்தில் உள்ள குறித்த பிரபல பாடசாலைக்கு தரம் 1 மாணவர் அனுமதியின்போது வலயகல்வி பணிமனையின் அதிகாரி ஒருவரின் சிபார்சில் மேலதிக மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளது. 

குறித்த மேலதிக அனுமதி மூலம் பெற்ற பணம் சிபார்சு செய்த வலய கல்வி பணிமனை அதிகாரியின் புத்தகத்திற்கான செலவு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த பாடசாலையில் மேலதிகமாக மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனரா? என பரிசீலனை செய்த கல்வியமைச்சு குறித்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 

குறித்த பாடசாலை அதிபருக்கு இடமாற்ற உத்தரவு எழுத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு