யாழ்.மாவட்டத்தில் இன்றும் நடக்கிறது பாரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்கள்..! ஊடகங்களில் விளம்பரம் வேறு, அங்கெல்லாம் உங்கள் சட்டம் பாயாதா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இன்றும் நடக்கிறது பாரிய நிகழ்வுகள், கொண்டாட்டங்கள்..! ஊடகங்களில் விளம்பரம் வேறு, அங்கெல்லாம் உங்கள் சட்டம் பாயாதா..?

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சடுதியாக அதிகாரித்துள்ளதாகவும், மக்கள் சுகாதார நடைமுறைகளை மீற கூடாதெனவும் யாழ்.மாவட்ட செயலர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள் போன்றவற்றுக்கு மீளவும் கட்டுப்பாடுகள் வீதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஆனாலும் கட்டுப்பாடுகள், உத்தரவுகளை மீறி மாவட்டத்தில் பல நிகழ்வுகள் நடந்துவரும் நிலையில் சுகாதார பிரிவினர் இந்நிகழ்வுகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? 

என்பது குறித்து கண்காணிக்கபடுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள மக்கள் சிவராத்திரி பூஜைகளின்போது மட்டுமே சுகாதார நடைமுறைகள் பேணப்படவேண்டுமா? இதர நிகழ்வுகள், கொண்டாட்டங்களில்

அது தேவையற்றதா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, 600 -700 பேருக்கு உணவு ஒழுங்கமைப்பு செய்து பாரிய நிகழ்வுகள் இன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.

இவற்றுக்கு சுகாதார பிரிவு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த காலங்களிலும் அரச அதிகாரிகள், படித்தவர்கள் என சொல்லப்படுவோர் கலந்துகொண்ட நிகழ்வுகள்

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடந்ததுண்டு அவ்வாறே இப்போதும் சிவராத்திரிக்கு ஓடித் திரிந்த சுகாதார பிரிவு இப்பொது என்ன செய்கிறது? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு