கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளராக வை.ஹபிபுல்லாஹ் பதவியேற்பு
கல்முனை பிரதேச செயலகத்தின் கணக்காளராக கடமையாற்றிய பிரபல கணக்கீட்டு ஆசிரியரும் பல் துறை ஆளுமையுள்ளவருமான வை. ஹபிபுல்லாஹ் இன்று(3) கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் கணக்காளராக தனது பதவியிணை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் அம்பரை,இறக்காமம்,மகாஓயா, நாவிதன்வெளி, கல்முனை போன்ற பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியவர் என்பதோடு 2008ம் ஆண்டு நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட/திறந்த இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சையில் அகில இலங்கையில் முதலாம் இடம் பெற்று சித்தியடைந்த வை.ஹபிபுல்லா ஒரு சிறந்த ஆளுமை கொண்ட செயற்திறன்மிக்க கணக்காளராவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ் பதவியேற்பு நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் எம்.ஐ.எம் முஸ்தபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி,அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ் ரஸ்ஸான்,கல்முனை வலயக்கல்வி பிரதி பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ ரஹீம், ஜிஹானா ஆலிப், அக்கரைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் சத்தார் மிர்ஸா,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எம்.பாரீஸ்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி பாரீஸ்,நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கே.இராமகுட்டி,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஹ்ஹரப்,அம்பாறை மாவட்ட வரவு செலவு திட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம் ஹலீஸ்,நிதி உதவியாளர் எம்.ஐ ரகுமான்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,கிராம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல் பத்துரூத்தீன்,உதவி கல்வி பணிப்பாளர்களான ஏ.பி.எப் நஸ்மியா என்.எம்.ஏ மலீக்.யூ.எல் சாஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.